அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை ஈரான் முன்வைக்கவில்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்றாக, ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் விதிகள் மிக மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, ஈரானிய மசகு எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத் தடைகளை நீக்குவது தொடர்பான ‘பிரிவு 10’ (Article 10) முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதில் ஈரான் அதிருப்தியில் உள்ளது.
தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் இறுதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை விட, ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விவகாரங்கள் குறித்து கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடுவதற்கே ஈரான் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
