மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க ‘ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்’ நாய்களை ஏவிவிட்ட பெண்!

களுத்துறை, கல்பாத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்ணொருவரால் எட்டு நாய்கள் ஏவி விடப்பட்டுள்ளது.

நாய்களின் தாக்குதலில் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8 முதல் 10 அடி உயரமான மதில்களால் சூழப்பட்ட வீட்டுக்குள் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெற்று வந்துள்ளது.

நீண்ட காலமாக மது அருந்துபவர்களுக்குத் தேவையான உணவுகளையும் வழங்கி, ஒரு உணவகம் போன்று இந்த சட்டவிரோத மதுபான விற்பனை மிகவும் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இதற்கு முன்னரும் இரண்டு சந்தர்ப்பங்களில் களுத்துறை பொலிஸின் விசேட பிரிவுகள் இந்த இடத்தை சுற்றிவளைக்க முயற்சித்துள்ளனர்.

எனினும் அவை உரிய முறையில் இடம்பெறாததால், களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மினி வீரசூரியவின் உத்தரவுக்கமைய, கடந்த 27ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பை மேற்கொள்ளும் பொறுப்பு அங்குருவாதொட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதற்கைமய, அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து, 1000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

இதன் போது சந்தேகநபரான மதுபான வியாபாரியின் மனைவி, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் ரொட்வைலர் உள்ளிட்ட விலையுயர்ந்த எட்டு பயங்கரமான நாய்களை ஒரே நேரத்தில் திறந்துவிட்டு பொலிஸ் அதிகாரிகளை கடிக்குமாறு ஏவிவிட்டுள்ளார்.

இதன்போது பொலிஸார் தம்மை பாதுகாக்கும் நோக்கில் தப்பியோடினர். எனினும் நாயின் பாய்ச்சல் காரணமாக பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில், மதுபான வியாபாரியையும் அவரது மனைவியையும் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்