பாடசாலைக்குச் சென்ற மகளை அழைத்து வருகையில் சோகம்: கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி தாய் மரணம்!

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது கரடி போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்திலேயே இளம் தாய் பலியாகியுள்ளார். இளைஞர்கள் தங்களது பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் வீதியில் வேகமாக ஓடித்திரிந்ததாக சம்பவத்தை அவதானித்த பொது மக்கள் குறிப்பிட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவனும் காயமடைந்துள்ளான். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்