அரச வங்கியில் பணம் கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது!

ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3-ஆம் திகதி பிற்பகல் 2:55 மணியளவில் வங்கியின் ஊழியர் ஒருவர், வங்கியின் பின் பக்கக் கதவினால் தமது இரு கைகளிலும் இரண்டு பணப்பைகளை எடுத்துச் சென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்த இரண்டு பணப் பைகளையும் பலவந்தமாகப் பறித்துக் கொண்டு தப்பியோடியிருந்தார்.

அப்பணம், சம்பந்தப்பட்ட வங்கியின் ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 30.5 மில்லியன் ரூபாய் பணமாகும்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!