சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி: நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த பிரேரணை ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் காவலில் இருந்த சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக நேற்று (07) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், இதுவரையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு தனக்கு மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகக் கூறி, குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்திற்குள்ளேயே அவர் உணவை தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

accident
மன்னார் பறயநாளன் குளம் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து: நால்வர் காயம்
gun shoot
கல்கிஸ்சையில் துப்பாக்கி இயங்காததால் நூலிழையில் உயிர்தப்பிய நபர்!
Ravindra Wijegunaratne
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுதலை!
jaffna
சமகால அரசியல் மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் தமிழ் பிரதிநிதிகள் கலந்துரையாடல்
chemmani protest
செம்மணி புதைகுழியை பார்வையிட வந்த ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு!
suresh saleh
சுரேஷ் சலேவின் ரிட் மனு: மேலதிக பரிசீலனை ஜூலை 27-க்கு ஒத்திவைப்பு!