கல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!

கடற்படையில் லெப்டினன்ட் (Lieutenant) அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷ, சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் புறம்பாகப் பிரித்தானியக் கடற்படைப் பயிற்சிக்கு எவ்வாறு பங்கேற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக, எதிர்வரும் 16-ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2006 டிசம்பர் 14-ஆம் திகதி கடற்படையில் இணைந்துகொண்ட யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக ஆணைக்குழுவிற்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை குறித்த விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டபோது சமர்ப்பித்த கல்வித் தகுதிகள் மற்றும் கடற்படையில் அவருக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சிப் பாடநெறிகள் ஆகியவை சட்டத்திற்கு முரணாக இடம்பெற்றதாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகளை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!