தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை சந்தித்த சிறீதரன் எம்.பி!

​”தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும், நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும், ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலையோடு இரண்டறக் கலந்தவருமான மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை, அவருடைய அமைச்சு அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

​இச்சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராகத் தனது பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, சந்திப்பின் நினைவாகப் புத்தகம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.

​விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், சமூக நீதித்துறை அமைச்சராகவும், அக்கட்சியின் மாநில விவகாரங்கள் குறித்த கொள்கைக் குழுவின் அங்கத்தவராகவும் பணியாற்றி வரும் ஒரு மூத்த அரசியல் தலைவராகத் திரு. வன்னி அரசு விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.”

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்