சர்வதேச அளவில் முதலிடம் பிடித்த இலங்கை: உலகின் “50 சிறந்த தீவுகள்” பட்டியலில் வரலாற்றுச் சாதனை!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி சுற்றுலா இணைய தளமான Big 7 Travel வெளியிட்டுள்ள உலகின் “50 சிறந்த தீவுகள்” வருடாந்த பட்டியலில், இலங்கை முதலிடத்தைப் பிடித்து உலகின் மிக அழகான தீவாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் பொலினீசியாவில் உள்ள ‘மோரியா’ மற்றும் ஈக்வடாரின் ‘கலாபகோஸ்’ போன்ற உலகின் மிகவும் பிரபலமான தீவுகளைப் பின்தள்ளி இலங்கை முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இலங்கையின் 1,300 கிலோமீற்றருக்கும் அதிக நீளமுள்ள அழகிய கடற்கரைகள் (மிரிஸ்ஸ, உனவடுன, பெந்தோட்டை, அருகம்பே, பாசிக்குடா), சிகிரியா, தம்புள்ளை குகைக்கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய ஆன்மீக மற்றும் புரதான நகரங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.

யானைகள் மற்றும் சிறுத்தைகள் வாழும் யால தேசிய பூங்கா, மிரிஸ்ஸவில் திமிங்கிலம் பார்த்தல் மற்றும் கல்பிட்டியில் திமிங்கலம் பார்த்தல் போன்ற பல்லுயிர் பெருக்க அம்சங்கள் இலங்கைக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.

மத்திய மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கண்டி – எல்ல இடையிலான தொடருந்து பயணம் மூடுபனி சூழ்ந்த மலைப் பிரதேசங்கள் இலங்கையின் அழகை உலகிற்கு பறைசாற்றுகின்றன.

முந்தைய ஊடகங்களின் மதிப்பீடுகள், சமூக வலைத்தளங்களில் இலங்கையின் பிரபலம் மற்றும் பயணிகளின் தற்போதைய ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தரவரிசை கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவமானது, உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் இலங்கையின் மதிப்பை மேலும் உயர்த்துவதுடன், நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறையின் மீள் எழுச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்