கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு சட்ட மாஅதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

மனுதாரரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்கள் என்பதால், அது குறித்து பரிசீலனை செய்யும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, இந்த மனுவை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது சமர்ப்பிப்புகளை நிறைவு செய்தார்.

அதற்கமைய, குறித்த வழக்கு மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்