அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற “சிசு சரிய” பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பயணித்துள்ளதுடன், விபத்தின் போது இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலன்னறுவை பகுதியிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளதுடன், விபத்து ஏற்படும் போது மற்றொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!