மன்னார் பறயநாளன் குளம் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து: நால்வர் காயம்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறைய நாளங்குளம் இரும்பு பாலத்தில் விபத்துக்குள்ளானது.

இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் (கன்னியாஸ்திரிகள்) காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

-மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள் (கன்னியாஸ்திரிகள்) பயணித்த வாகனமே விபத்துக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!