கடுவெலையில் சொகுசுப் பேருந்துக்குத் தீவைத்த மர்ம நபர்கள்: ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை (05) கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.

இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.

நெடுஞ்சாலை வழியாக கடுவெல – மாத்தறை இடையே இயக்கப்படும் ஆடம்பர பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என கடுவெல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சந்தேக வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கடுவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!