கனடாவில் காலமான ஊடகவியலாளர் அ.சபேஸ்வரனின் பூதவுடல் புதன்கிழமை தாயகம் வருகை: வியாழனன்று கோம்பயன் மணலில் தகனம்!

கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார் 

அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு , நாளை மறுதினம் புதன்கிழமை அஞ்சலிக்காக கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கும். 

மறுநாள் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெற்று , தகன கிரியைகளுக்காக பூதவுடல் , கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என குடும்பத்த்தினர் அறிவித்துள்ளனர். 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalRajapaksa
30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
RanilWickremesinghe
மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
JaffnaHinduCollege
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!
JeevanThondaman
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு
Pillayan
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!
GnanasaraThero
ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை