சர்வதேச கராத்தே போட்டியில் களம் காணும் யாழ். மண்ணின் மைந்தன்: அவுஸ்திரேலிய தேசிய அணியில் ரத்னம் ரோஸி ஹரிந்த்!

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரி வாகி. தாய்லாந்தில் ஆரம்பமாக வுள்ள, சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.

கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் துமுளு கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!