மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!

திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை நேற்று (14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 52 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் திருகோணமலை பகுதியில் வசித்து வருபவர் என்றும் சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்ட கல் 3 கிலோ 100 கிராம் எடையுடையது என்றும் கூறப்படுகின்றது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்