பிரசவத்திற்காக சுற்றுலா விசா: இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.

இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும், இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!