2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!

நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில், யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.

இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன்.

நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும்.

இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன். நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!