நாமலின் கைது வழக்கு: ரணில் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது – அமைச்சர் விஜித ஹேரத் தெளிவு!

சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இது நாங்கள் தாக்கல் செய்த வழக்கு அல்ல. இது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் முன்னரே தாக்கல் செய்யப்பட்டது. அவர் இதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம், அவர்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தம். முந்தைய அரசாங்கம் இந்த வழக்கு தொடர்பில் முறையான விசாரணைகளையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளையோ முன்னெடுக்கத் தவறியது.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் முறையாக விசாரிப்பதற்குத் தேவையான வசதிகளும் நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!