தகுதியின்றி பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட வழக்கு: மேல் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.

தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பின்னணியில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!