அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இராஜதந்திர முயற்சி! இந்திய, அமெரிக்க தூதரகங்களுடன் தமிழரசுக்கட்சி பேச்சு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பில், இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அந்தோணி வி. பிர்னட் (Anthony V. Pirnot) ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று (23) இடமபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவில் அனோஜனுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கில், முன்னதாக சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேல்முறையீட்டின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணி மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அனோஜனின் உயிரை காப்பாற்றுவதற்கான இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு நாடுகளின் தூதரக அதிகாரிகளிடமும் தலையீடு மற்றும் ஆதரவை கோரியுள்ளனர்.

இதன்போது அனோஜன் குடும்பத்தினரின் சார்பில் வழக்கின் நிலைமை தொடர்பான தகவல்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனோஜனை மரண தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்காக தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளையும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!