பயணிகளை இறக்க நின்ற பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து: 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

புத்தள – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (CTB) பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று (24) காலை விபத்தொன்று சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லவாயவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக மஹகொடையாய பகுதியில் நிறுத்தப்பட்டபோது, மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பின்னாலிருந்து வந்த தனியார் பேருந்து, இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாகப் புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!