கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் அத்தம வேலைத் திட்டத்திற்கு, அசுவெசும கொடுப்பனவு பெறுபவர்கள் வரவேண்டும் என்று பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கூறிய விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மேற்குறித்த வேலைத்திட்டமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிலும் குறித்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனவே அந்த வேலைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு சங்கானை தேவாலய வீதியில் அமைந்துள்ள பழக் கடைக்கு அருகாமையில் மக்களை ஒன்றுகூடுமாறு கிராம சேவகர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கூறியதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான துவாரகா கூறியுள்ளார்.
அதிலும் அசுவெசும கொடுப்பனவு பெறும் அனைவரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் குறித்த உறுப்பினர் தமது கிராமத்தின் சமூக ஊடக குழு ஒன்றில் குரல் பதிவினை பகிர்ந்துள்ளார். இந்த விடயமானது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
