தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு

மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலையகத் தமிழர்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்யவும், தேயிலை கொழுந்து பறிக்கவும் வந்தவர்கள் எனக் கூறி, இழிவுபடுத்தும் வகையில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது வெறுமனே ஒரு சமூக ஊடகப் பதிவு அல்ல என்றும், தலைமுறை தலைமுறையாக மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இனவாத வெளிப்பாடு என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத் தமிழ் மக்களின் முன்னோர்கள் கடினமான மலைப்பகுதிகளில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உழைத்து, நாட்டின் தேயிலைத் தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்புவதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!