30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!

எயார்பஸ் விவகாரத்தில் பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அது குறித்து குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் சந்தேகநபருக்கு நீதவானால் மேலும் ஒரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது..

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!