சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

இலங்கையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண், திருச்சி லால்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை கடந்த ஜூன் 4ஆம் திகதி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

 தங்களது திருமணத்தை விசேட திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய லால்குடி சார் பதிவாளருக்கு உத்தரவிடுமாறு கோரி அவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்தபோது, மனுதாரர் கடந்த மே 14 ஆம் திகதி ஒரு மாத சுற்றுலா இ-விசாவில் இந்தியா வந்ததாகவும், ஜூன் 13ஆம் திகதியுடன் விசா காலம் முடிந்த நிலையிலும் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பது விசா விதிமுறை மீறல் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனால் அவரை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், மனுதாரர் கர்ப்பிணியாக இருப்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதையும் இந்தியாவில் அவரது கணவரைத் தவிர வேறு உறவினர்கள் இல்லாத சூழ்நிலையையும் சுட்டிக்காட்டினார். 

எனவே, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். 

மேலும், தற்போது இவர்கள் செய்துகொண்ட திருமணம் சட்டப்படி முழுமையாகப் பொருந்தாததால் நேரடியாகப் பதிவு செய்ய உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிபதி, பொருத்தமான சட்டத்தின் கீழ் 60 நாட்களுக்குள் முறைப்படி திருமணத்தை நடத்திப் பதிவு செய்ய அவகாசம் அளித்தார். 

இந்த 60 நாட்களுக்கு மனுதாரரை நாடுகடத்தக் கூடாது என்றும், அதற்குள் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் இந்தியாவில் தொடர்ந்து தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!