மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேரர், அங்குள்ள N பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அதே பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, 10 கைதிகளுடன் ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதற்கமைய, தேரரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!