உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவம் குறித்து மேலும் இருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு இன்று இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்டவர்களுடன்; இணைந்து புத்தளம், வண்ணாத்துவில்லு லெஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை களஞ்சியப்படுத்தியதாக குறித்த இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
