சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற காரணம்: பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தெளிவுபடுத்தல்!

தாம் முன்னெடுத்து வந்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு மத்தியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகவே கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வந்த விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக் களத்தில் தங்கியிருந்த போது தனது ஆரோக்கிய நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், மருத்துவத் தேவைகள் மற்றும் ஓய்வுக்காகவே மக்களினால் ஏற்பாடு செய்து தரப்பட்ட குறித்த விடுதிக்கு சென்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!