இரு கத்திகளுடன் வந்தவர்கள் பற்றி பொய்யான தகவல்? கஸ்ஸப தேரர் மீது பொலிஸ் நடவடிக்கை!

விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது பலாங்கொடை கஸ்ஸப தேரர் பொதுமக்களை ஆத்திரமூட்டும் மற்றும் தவறாக வழிநடத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தலைமையகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் கடந்த சில நாட்களாகக் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தின்போது பலாங்கொட கஸ்ஸப தேரர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துகள் பொதுமக்களை ஆத்திரமூட்டும், தவறாக வழிநடத்தும் மற்றும் மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையிலான பொய்யான கருத்துகள் என தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தலைமையக அமைப்பாளர் ஜகத் பஸ்நாயக்க முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விகாரமகாதேவி பூங்காவிற்கு இரண்டு கத்திகளுடன் வந்த இருவர் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர் கடந்த 22ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் பொய்யானவை என்றும், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

பொய்யான கருத்துகளைப் பரப்புவது பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98ஆவது பிரிவை மீறும் செயல் எனத் தெரிவித்த பொலிஸார், குறித்த கருத்துகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினர்.

மேலும், சம்பவம் தொடர்பான திருத்தப்படாத காணொளிகளைப் பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரினர்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், குறித்த கருத்துகள் தொடர்பான திருத்தப்படாத காணொளிகளைப் பொலிஸாரிடம் வழங்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!