உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா வைத்தியர் மதுரகன்

உலக சுகாதார அமைப்பின் நோய்த்தணிப்பு மருத்துவம் தொடர்பான வருடாந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியாவைச் சேர்ந்த வைத்தியர் மதுரகன் கலந்து கொண்டுள்ளார்.

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெறும் இந்தக்கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து ஒரே நபராகப் வைத்தியர் மதுரகன் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில், 31 நாடுகளைச் சேர்ந்த 66 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.

பல நோய்களைக் குணப்படுத்த முடிந்தாலும், குணப்படுத்த முடியாத மற்றும் இறுதிக்கட்ட நோய்களுடன் வாழும் ஏராளமான நோயாளிகள் உடல் வலி, மனவேதனை மற்றும் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால், இந்தத் துன்பங்களில் பலவற்றைத் தடுக்கவும், குறைக்கவும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. இதுவே நோய்த்தணிப்பு மருத்துவத்தின் அடிப்படை நோக்கமாகும்.

குணப்படுத்த முடியாத நோய்களுடன் வாழும் நோயாளிகளின் வலியையும் துன்பத்தையும் குறைத்து, அவர்களின் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை கண்ணியத்துடனும், ஆறுதலுடனும், அர்த்தமுள்ளதாகவும் வாழ உதவுவதே நோய்த்தணிப்பு மருத்துவத்தின் முக்கிய இலக்காகும். உயிர்வாழும் ஆண்டுகளை அதிகரிப்பது மட்டுமல்ல, எஞ்சியிருக்கும் ஆண்டுகளின் உயிர்ப்பை அதிகரிப்பதே நோய்த்தணிப்பு மருத்துவத்தின் நோக்கம்.

இந்த நோக்கத்தையும் இலக்கையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்திலும் நோய்த்தணிப்பு மருத்துவத்திற்கான கொள்கை உருவாக்கம், வலியுறுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், நிதி ஒதுக்கீடு மற்றும் நிதியளிப்பு முறைகள், அனைவருக்கும் சமமான சுகாதாரப் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான நோய்த்தணிப்பு மருத்துவச் சேவைகள், இது தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஒன்றோடொன்று தொடர்புடைய பல விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவைகளை வலுப்படுத்தி, தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் அவற்றைச் சமமாகவும் உரிய நேரத்திலும் கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!