உலகில் தானம் செய்வது, தன்னிடம் இருப்பதைத் தேவையுடையவர்களுடன் பகிர்ந்துகொள்வது உயர்ந்த பண்பு. குறிப்பாக, பிறரின் துயரத்தைத் துடைக்கத் தன்னலமின்றி உதவுவது சிறப்பான செயலாகும். ஒருவர் துயரத்தில் இருக்கும்போது, அவருக்கு ஆறுதல் கூறுவதும், இயன்ற உதவியைச் செய்வதும் உயர்ந்த மனிதநேயத்தின் அடையாளமாகும்.
அவ்வாறு வர்த்தகத்துறையில் தான் ஈட்டிய இலாபத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் வர்த்தகப் பிரமுகர்தான் SKT நாதன்.

சுவிற்சர்லாந்தில் கடந்த 38ஆண்டுகளாக எஸ்.கே.ட்ரேடிங் நகை மாளிகை, புடவை மாளிகை, SKT நாதன் கடை என பலசரக்கு மாளிகையும் நடத்தி வருகிறார்.
எஸ்.கே.ட்ரேடிங் நகைமாளிகை, புடவை மாளிகை நிறுவனத்தில் நாள்தோறும் வாடிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பார். அவர்களின் நலன் விசாரிப்பார். வாடிக்கையாளர்- வர்த்தகர் என்பதற்கு அப்பால் ஓர் அன்பான உறவைப் பேணி வருபவர் சுப்ரமணியம் கதிர்காமநாதன் ஆகிய எஸ்.கே.ரி.நாதன்.
சூரிச் மாநகரில் புதிதாக பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட SKT நகைமாளிகை – புடவை மாளிகை, 14.09.2026 அன்று Hardturmstrasse 135, 8005 Zürich என்ற முகவரியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி திறப்பு விழாவில் கலந்து கொண்டமை பெருமகிழ்வைத் தந்தது. அடியேனின் பணியை SKT நிறுவனத்தின் புதிய கடைத் திறப்பு விழாவிலும் புரிந்தேன். காலை முதல் மாலை வரை பணியில் ஈடுபட்டேன். புடவைத் தினுசுகள் அனைத்தும் 50 வீத விலைக்கழிவு. திறப்பு விழா நாளில் தங்க நகைகளின் விலையிலும் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது. கொள்முதல்களுக்கு அப்பால் பணம் செலுத்தும் இடத்திலேயே அதிர்ஷ்ட குலுக்கலையும் நடத்தி, உடனுக்குடன் பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கப்பட்டன. சிலருக்கு தங்க நகைகளும் பரிசாக வழங்கப்பட்டன.
ஒரு பெண் வாடிக்கையாளருக்குத் தங்கச்சங்கிலி பரிசாகியது. “தங்கசங்கிலியா?” என அவர் வியப்படைந்தார். புடவைகள் 50 வீத விலைக்கழிவில் வாடிக்கையாளர்கள் தெரிவு செய்து பணம் செலுத்தும் வேளையில் அதிக தொகைக்கு சேலைகள் தெரிவு செய்திருந்தவர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புக் கழிவை நாதன் வழங்கிக் கொண்டதை அவ்வப்பொழுது அவதானிக்க முடிந்தது.
சுவிற்சர்லாந்து சூரிச்சில் 38 ஆண்டுகள் தொடர்ச்சியாக வர்த்தகப்பணியில் ஈடுபட்டு வரும் SKT நாதன், ஆர்ப்பரிப்பின்றி அமைதியாக, மிகக் காத்திரமான மனிதநேயப் பணிகளை நமது தேசத்தில் ஆற்றிவரும் ஓர் உன்னதமானவர். வர்த்தகம் அவரது தொழில். அதில் மிக நேர்மையாக தொழில்பட்டு வருபவர். பலருக்குத் தொழில்கள் வழங்கி அவர்களை மேன்மையுற வைத்துள்ளார்.
கிளிநொச்சியில் அவரது பணிகள் நூற்றுக்கணக்கானோரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. மூத்தோரை மதித்து முதியோர் இல்லத்தை முழுமையான ஈடுபாட்டுடன் இயக்கி வருகிறார்.
தேடிய செல்வத்தைத் தான தர்மம் என வழங்குவதற்கு எல்லா தனவந்தர்களும் முன் வருவதில்லை. மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அவருடைய பணிகள் பல நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இவருடைய அனைத்துப் பணிகளுக்கும் மனைவி திருமதி.தனலட்சுமி கதிர்காமநாதன், புதல்வி செல்வி.மாதங்கி உறுதுணையாக இருந்து உதவி வருகின்றனர்.
யாழ்.பொது வைத்தியமனைக்குத் தேவையான ஸ்கேனர் கருவியைக் கொள்முதல் செய்ய கோடிக்கணக்கில் கொடை புரிந்துள்ளார். ‘வைத்தியகலாநிதி’ சத்தியமூர்த்தி தலைமையில் இப்பணி மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டது.
தெல்லிப்பழை வைத்தியமனைக்கு புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வைத்திய உபகரணங்கள் பெரும் பண முதலீட்டில் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன.
காரைநகரில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 குடும்பங்கள் வீடுகள் அமைத்துக் கொள்ள ஏழரைக் கோடி ரூபாவை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கி வைத்துள்ளார். கிளிநொச்சியில் ‘எவர் கிறீன்’ தோட்டத்தை மிகச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார். இவர் ஆன்மீகப் பணிகளையும் மேற்கொள்கிறார்.
கிளிநொச்சியில் இரண்டு ஆலயங்கள் இவரால் பராமரிக்கப்படுகின்றன.
யாழ்.காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் நுழைவாயிற் கோபுரத்தை பல இலட்சம் ரூபா செலவில் அமைத்து திருத்தொண்டாற்றியுள்ளார்.
காரைநகர் மேற்கு ‘கும்பநாயகி முத்துமாரி அம்மன்’ ஆலய திருவிழா உபயகாரராகத் திகழும் இவர், பல கோடி ரூபா செலவில் இவ்வாலயத்தைப் புனரமைப்புச் செய்துள்ளார். இந்த ஆலயம் இவருக்கு ‘திருப்பணியரசு’ என பட்டமளித்து மாண்பேற்றியுள்ளது.
சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் ‘சைவத்தொண்டர்’ செந்தில்நாதன் SKT நகைமாளிகை, புடவைமாளிகை புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டார்.
இக்கட்டுரையின் உசாத்துணை ‘சைவத்தொண்டர்’ செந்தில்நாதன். எங்கு உதவி தேவையோ அவற்றை அறிந்து ஈகை புரிந்து மக்கள் மனங்களை வென்றுள்ள எஸ். கே.ரி.நாதனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
– எஸ்.கே.ராஜென்
