‘சிவுருக்கு நீதி’ நடைபயணப் பின்னணி: பிக்கு அல்ல, முன்னாள் நகர சபை உறுப்பினர் என சமூக ஊடகங்களில் தகவல்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக காவியுடை அணிந்து, நாக உருவம் பொறிக்கப்பட்ட மரக்கைத்தடியுடன் ‘சிவுருக்கு நீதி’ எனும் தொனிப்பொருளில் நடைபயணத்தை ஆரம்பித்த நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சை வெடித்துள்ளது.

கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணத்தை முன்னெடுத்த நபர் ஒரு பௌத்த பிக்கு அல்லர் என்றும், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்திய அம்பலாங்கொடை முன்னாள் நகர சபை உறுப்பினரான கிரேஷன் கெரமினியே என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

குறித்த நபர் இதற்கு முன்னரும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு ஆதரவான பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் புகைப்படங்களும் சான்றுகளும் தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

கடுகண்ணாவை பரமிதா பௌத்த நிலையத்திலிருந்து ஆரம்பித்து கேகாலை வழியாக கொழும்பைச் சென்றடைவதே இந்த நடைபயணத்தின் திட்டமாக இருந்துள்ளது. அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சிங்கள பௌத்த உணர்வுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே இதனை ஏற்பாடு செய்ததாக அதன் தேசிய அமைப்பாளர் தெரிவித்திருந்தார்.

நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் சுமார் ஆறு பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் குறித்த நபர் அதிருப்தி வெளியிட்டதாகத் தெரியவருகிறது.

பௌத்த காவியுடை மற்றும் புனிதமான பாரம்பரிய அடையாளங்களைச் சுய அரசியல் இலாபங்களுக்காகவும் பிரச்சாரங்களுக்காகவும் தவறாகப் பயன்படுத்துவதாகப் பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தமது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!