முல்லைத்தீவு மீனவர்கள் 3 பேரைக் கண்டுபிடிக்க சர்வதேச தேடுதல்: வெளிவிவகார அமைச்சுக்கு அவசர கடிதம்

முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன மூன்று கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக அண்டை நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 26.10.2026 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள், ‘மொன்தா’ (Cyclone Montha) சூறாவளியுடன் தொடர்புடைய சீரற்ற காலநிலை காரணமாகக் கடலில் காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போன கடற்றொழிலாளர்களைத் தேடும் நடவடிக்கைகள் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவர்களையோ அவர்களது படகையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது நிலவும் கடுமையான கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமாக, குறித்த படகு இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி அண்டை நாடுகளின் கடற்பரப்பிற்குச் சென்றிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இதனைக் கருத்திற்கொண்டு, அண்டை நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இராஜதந்திர வழிமுறைகளினூடாக உடனடியாக அறிவித்து, சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் ஏற்படுத்துமாறு மாவட்டச் செயலாளர் கோரியுள்ளார்.

காணாமற்போன கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவைச் சேர்ந்த 26 வயதுடைய ஜெசுநாயகம் அந்தோனிஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தையா சிறிபுஷ்பராஜா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 48 வயதுடைய மொஹமட் ரிஜாஸ் ஆகியோராவர்.

இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் நேற்றையதினம் (30.10.2026) வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

மேலும், குறித்த கடிதத்தின் பிரதிகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காணாமற்போன மூன்று கடற்றொழிலாளர்களையும் கண்டறிவதற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பை அவசரமாகப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் மாவட்டச் செயலாளர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!