அராலி சந்தியில் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்து: போதைப்பொருள் பாவித்த சாரதியை கைது செய்தது பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற இலங்கை போக்குவரத்து பேருந்தின் சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணிகளை ஏற்றி சென்ற இலங்கை போக்குவரத்து பேருந்தும் , முச்சக்கர வண்டியொன்றும், யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அராலி சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் பின்னால் சென்று மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் , முச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்

அதனை தொடர்ந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் பேருந்து சாரதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு , போதைப்பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில் , சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து , சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் ஊர் காவல்துறை போலீசார்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!