நல்லூர் திலீபன் நினைவாலயம் சட்டவிரோதமானது: உடனடியாக இடித்து அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காணி நல்லூர் ஆலயத்திற்கு சொன்னதமானது. அதனை நீண்ட கால குத்தகை அடிப்படையில் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , குறித்த காணிக்குள் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலய கட்டுமானங்கள் மாநகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படாமல் , கட்டப்பட்டுள்ளதாக தாம் அறிவதாகவும் , குறித்த கட்டுமானத்தால் , மக்கள் மனதில் யுத்த எண்ணங்கள் தோன்றும் என்பதுடன் , அது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என்பதனால் , அதனை உடனடியாக இடித்து அகற்றுமாறு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மாநகர சபையினருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்

அதேவேளை , கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வில் , கண்ணாடி இழைகளால் தியாக தீபத்தின் சிலை உருவாக்கப்பட்டு , குறித்த நினைவாலயத்தில் அந்த சிலை வைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் , நினைவேந்தல் நிகழ்வுகள் முடிவுற்று மறுநாள் காலை , யாழ்ப்பாண பொலிஸார் அந்த சிலையை அங்கிருந்து அகற்றி எடுத்து சென்று நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ShootingIncident
திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு: கடற்படைச் சிப்பாய் பலி; இருவர் காயம்!
CigarettePrices
உலகிலேயே மிக அதிக விலையுள்ள சிகரெட் கொண்ட நாடாக இலங்கை: ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆய்வில் வெளிவந்த தகவல்!
PrisonShooting
பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: 27 வயது விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!
NamalRajapaksa
"தடுப்புக் காவலில் உள்ளவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு": நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!
UKTamils
பிரித்தானியாவில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை: 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
OxfordTamilEvent
ஒக்ஸ்போர்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாக நிதி சேகரிப்பு விருந்துபசாரம்: திரளான தமிழர்கள் பங்கேற்பு!