ஒக்டோபர் 18, 2026 அன்று இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் மதிப்பளிப்பு நிகழ்வுடன் கூடிய விருந்துபசாரம் நடைபெற்றது.

உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான நிதியைச் சேகரிக்கும் நோக்கில், உலகத் தமிழர் வரலாற்று வளாக நிர்வாகமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் லண்டன் மற்றும் லிவர்பூல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல தமிழர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.






உலகத் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுக்குப் பாதுகாத்து எடுத்துச் செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வளாகத்தின் கட்டடப் பணிகளுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியாக இந்நிகழ்வு அமைந்தது.
