பிரித்தானியாவில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை – ஐக்கிய இராச்சியக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிப் பட்டறை, கடந்த 31/10/2026 அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரித்தானியாவில் வளர் தமிழ் நூல்களைப் பின்பற்றிக் கற்பிக்கும் 600 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இளையோர்கள் மற்றும் தமிழ்ப் பாடசாலை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு. செல்வராஜா முரளிதரன் OAM அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமை அலுவலக மேலாளர் திருமதி அரியரத்தினம் நகுலேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல், கல்விசார் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் தமிழ்க் கல்வியின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இப்பட்டறை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று, சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு உள்ளிட்ட உபசரிப்புகளை ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்பாக வழங்கினர்.


600 இற்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்த இப்பட்டறை, பிரித்தானியாவில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சிக்கும் ஆசிரியர்களின் தொழில்சார் மேம்பாட்டிற்கும் வலுச்சேர்க்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
