இலங்கை கடற்படையின் கூட்டு மீட்பு நடவடிக்கை: ஆபத்தின்றி மீட்கப்பட்ட 4 கடற்றொழிலாளர்கள்

குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்று மீண்டும் கரை திரும்பாத நான்கு கடற்றொழிலாளர்களை கண்டறிவதற்காக, கடற்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மீன்பிடித் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, இலங்கை கடற்படை, கடலோரக் காவல்ப்படை திணைக்களம், விமானப்படை மற்றும் குறித்த கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏனைய மீன்பிடிப் படகுகளுக்கு அறிவித்தல் வழங்கி, ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், கடந்த 01 ஆம் திகதி, பொத்துவில் கடற்கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஆழ்கடலில் எவ்வித ஆபத்துமின்றி ஹேஷக சுதா(IMUL-A-0658-KLT) என்ற பலநாள் மீன்பிடி படகை கண்டுபிடிக்க முடிந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தினால் ஏனைய மீன்பிடிப் படகுகளுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டு, இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல கப்பலை ஈடுபடுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின்போது, காணாமல் போயிருந்த மீன்பிடிப் படகையும் அதில் பயணித்த நான்கு கடற்றொழிலாளர்களையும் பெரும் பிரயத்தனத்துக்கு மத்தியில் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை ஏனைய தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையின் பயனாகக் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு (04) கடற்றொழிலாளர்களும், தற்போது இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல கப்பல் மூலம் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!