வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி, “முரசு” சூறாவளி இந்தியாவின் நிலப்பகுதியை அடைந்துள்ளதுடன், அது தொடர்ந்து வட- வடமேல் திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (03) முற்பகல் 11:30 மணியளவில் அது ‘சுழல்காற்றாகவும்’ (cyclonic storm), நள்ளிரவு 11:30 மணியளவில் மேலும் வலுவிழந்து ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்’ (deep depression) படிப்படியாகக் குறையும்.
குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில வேளைகளில் மணித்தியாலத்திற்கு 65 – 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், இதனால் இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக மாற்றமடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, கடற்றொழில் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
