உயிரிழந்த உறவுகளை நினைவுகூர தடையிலில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கும் எந்தவித தடையும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கும், அந்த அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது என அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, நினைவேந்தல் நடவடிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை என்றும், அவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், யுத்தத்தில் உயிரிழந்த தமது தாய், தந்தை, பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களின் நினைவாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கும் எவருக்கும் தடையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழர் நினைவேந்தல் நடவடிக்கைகளைத் தடைசெய்வதே அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்றும், சட்டத்திற்கு முரணான வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சில அரசியல் தரப்பினர் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் – சிங்கள மக்களிடையே இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவருக்கும் ஒரே சட்டமே நடைமுறைப்படுத்தப்படும் என்றும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை குறித்தும் இதன்போது விளக்கமளித்தார்.

அதற்கமைய, அந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து விளக்கங்களைப் பெற்று மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

OxfordTamilEvent
ஒக்ஸ்போர்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாக நிதி சேகரிப்பு விருந்துபசாரம்: திரளான தமிழர்கள் பங்கேற்பு!
MurasuCyclone
வங்கக்கடலில் "முரசு" சூறாவளி சீற்றம்: கடலோர மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
skt
பிறர் துயர் துடைக்க தன்னலமின்றி உதவும் வர்த்தகப் பெருமகன் சுவிஸ் S.K.T நாதன்
Kadawatha
பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி
SocialMediaControversy
'சிவுருக்கு நீதி' நடைபயணப் பின்னணி: பிக்கு அல்ல, முன்னாள் நகர சபை உறுப்பினர் என சமூக ஊடகங்களில் தகவல்
JaffnaNews
அராலி சந்தியில் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்து: போதைப்பொருள் பாவித்த சாரதியை கைது செய்தது பொலிஸ்