பாடசாலைகளுக்கு விசேட தீபாவளி விடுமுறை: வெளியான அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (14) கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வழமைபோல் இயங்கும் எனவும் ஆளுநர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (9) விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

OxfordTamilEvent
ஒக்ஸ்போர்டில் உலகத் தமிழர் வரலாற்று வளாக நிதி சேகரிப்பு விருந்துபசாரம்: திரளான தமிழர்கள் பங்கேற்பு!
MurasuCyclone
வங்கக்கடலில் "முரசு" சூறாவளி சீற்றம்: கடலோர மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
skt
பிறர் துயர் துடைக்க தன்னலமின்றி உதவும் வர்த்தகப் பெருமகன் சுவிஸ் S.K.T நாதன்
Kadawatha
பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி
SocialMediaControversy
'சிவுருக்கு நீதி' நடைபயணப் பின்னணி: பிக்கு அல்ல, முன்னாள் நகர சபை உறுப்பினர் என சமூக ஊடகங்களில் தகவல்
JaffnaNews
அராலி சந்தியில் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்து: போதைப்பொருள் பாவித்த சாரதியை கைது செய்தது பொலிஸ்