செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நீதி கோரி, எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.30 மணிக்கு செம்மணியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பில் சர்வதேச நீதியை வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் இன்று (07) முற்பகல் யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது, போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
