போலி GovPay குறுஞ்செய்திகள் மூலம் மோசடி: பொதுமக்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அவசர எச்சரிக்கை!

இலங்கை காவல்துறை பெயரில் பெறப்படும் போலி குறுஞ்செய்திகள் (SMS) மூலம், போலி GovPay இணைப்புகளைப் பயன்படுத்தி வேகக் கட்டுப்பாட்டு மீறல்களுக்கான தண்டப் பணத்தைச் செலுத்துமாறு கோரும் இணைய மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று (09) வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, பொதுமக்களிடையே பரவி வரும் இந்த SMS மற்றும் iMessage அறிவிப்புகள் முற்றிலும் போலியானவை என்றும், தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்களைத் திருடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப் பணத்தைக் கோரி அமைச்சோ அல்லது வேறு எந்தவொரு அரச நிறுவனமோ உத்தியோகபூர்வ GovPay தளத்தின் ஊடாக இவ்வாறான அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

GovPay டிஜிட்டல் கட்டண முறைமையானது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான நடைமுறைகளின் கீழ் மட்டுமே இயங்குவதாகவும், lygov.art போன்ற சந்தேகத்திற்குரிய இணையதளங்கள் ஊடாக தண்டப் பணங்களை வசூலிப்பதில்லை என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

போலி கட்டண இணைப்புகளைக் கிளிக் செய்ய வைப்பதன் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களைப் பெற இந்த மோசடி முயல்வதாக அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறான குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் அவற்றில் உள்ள எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் அல்லது சட்ட அமுலாக்க நிறுவனங்களில் இருந்து வருவதாகக் கூறிப் பெறப்படும் சந்தேகத்திற்கிடமான அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அரசாங்க சேவைகளைப் பெறும்போது gov.lk இணைய முகவரியின் கீழ் உள்ள உத்தியோகபூர்வ அரசாங்க இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துமாறும், மூன்றாம் நபர்களுடன் தனிப்பட்ட அல்லது நிதிச் சான்றுகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பிரதி அமைச்சர் பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!