வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு கட்டணமில்லா இரட்டைப் பிரஜாவுரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரைத் தாய்நாட்டுடன் இணைக்கும் நோக்கில், ‘உலகளாவிய இலங்கை மரபுரிமைப் பிரஜை’ என்ற புதிய திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர் மற்றும் பிள்ளைகளுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் எவ்வித கட்டணமுமின்றி இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இலங்கை வம்சாவளியினர் தமது தாய்நாட்டுடனான தொடர்பைப் பேணுவதை ஊக்குவிப்பதுடன், பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!