போலி சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது!

போலி சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தமை மற்றும் போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடை பிரதேச குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (11) வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர சந்திப் பகுதியில் வைத்து, போலி சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 12 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 8 போலி தேசிய அடையாள அட்டைகளை உடைமையில் வைத்திருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அங்கொடை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!