குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் இலங்கைக்குக் கிழக்கே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம், மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காற்றழுத்தப் பிரதேசம் வடமேற்குத் திசையில் நகர்ந்து, இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாளை (15) தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் புயலாக வலுவடையக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இன்று (14) அதிகாலை 5.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை, வட அகலாங்குகள் 05°N முதல் 15°N வரையிலும், கிழக்கு நெட்டாங்குகள் 80°E முதல் 90°E வரையிலும் உள்ள ஆழ்கடல் பிரதேசங்களிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளிலும் கடற்றொழில் மற்றும் கடல் பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கடற்பிரதேசங்களில் ஏற்கனவே தங்கியுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணிகள் உடனடியாக அங்கிருந்து விலகி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும் மீனவ சமூகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வடகிழக்கு அல்லது வடக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?