வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக 2.5 இலட்சம் பேரை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,25,018 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய தேசிய மட்டத்திலான வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, தெற்கு, மேல், சபரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய ஆறு மாகாணங்களை மையப்படுத்தி இதுவரை ஆறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 87 தொழிற்பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் 123 நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!