வெளிநாட்டவர் என அறிமுகப்படுத்தி நகைக்கடைகளில் கைவரிசை: ரூ. 20 இலட்சம் நகைகள் மீட்பு!

கொழும்பு கோட்டை, துறைமுகம் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள ஆடம்பர நகைக்கடைகளுக்குச் சென்று, நகைகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து 2,800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தரும் நகைக்கடைகளையே குறித்த சந்தேகநபர் இலக்கு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் மற்றும் இம்மாதம் பல சந்தர்ப்பங்களில் குறித்த நகைக்கடைகளுக்குச் சென்ற அவர், தன்னை ஆங்கிலப் பிரஜை என அறிமுகப்படுத்தி, நகைகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி அவற்றைப் பார்வையிடும் போர்வையில் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டை காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பல நாட்களாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்போது, சந்தேகநபர் இலங்கையர் என்பதும், அவரது தாயார் ஆங்கிலப் பிரஜை என்பதும் தெரியவந்துள்ளது.

37 வயதுடைய சந்தேகநபர், கட்டுகஸ்தோட்டை மாப்பானாவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கல்கிசையில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்து இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட நகைகளை செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்ய முயன்றபோது அவற்றைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட நகைகளில் 68 சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட ரோஸ் கோல்ட் மோதிரம் மற்றும் இளஞ்சிவப்பு நிற நீலக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஆகியவையும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேகநபர், திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்து பெற்ற பணம் முழுவதையும் போதைப்பொருள் கொள்வனவுக்காகச் செலவிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MahindaRajapaksa
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் 81ஆவது பிறந்தநாளில் நாமல் வெளியிட்ட விசேட கடிதம்!
Canada
கனடா செல்லக் காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! வெளியான முக்கிய அறிவிப்பு!
ElderlySafety
வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களைப் பாதுகாக்க காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Meemure
நக்கிள்ஸ் வனப்பகுதி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி தகவல்!
SivagnanamShritharan
யாழ்ப்பாணத்தில் தொல்.திருமாவளவன் - சிறீதரன் எம்.பி விசேட சந்திப்பு!
ChemmaniMassGrave
ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து செம்மணியை நோக்கி மக்கள் பேரணி