மற்ற கடைகளில் திருடி, தமது கடையில் விற்பனை செய்த நூதன மோசடி: சிக்கிய தம்பதியினர்!

சொகுசு காரில் வரும் தம்பதியினர் சாதாரண வாடிக்கையாளர்களாக பல மளிகை கடைகளுக்கு சென்று பொருட்களை திருடும் மோசடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குருவடோட்டா பகுதியில் உள்ள பல மளிகை கடைகளுக்கு செல்லும் இந்த தம்பதியினரின் நோக்கம் பொருட்களை வாங்குவது அல்ல, மாறாக கடைக்காரர்கள் கவனக்குறைவாக இருந்தபோது பொருட்களைத் திருடுவது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல கடைகளில் இருந்து திருடப்பட்ட பொருட்களை தாங்கள் நடத்தும் கடையில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பிலியந்தல பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் மற்றும் 49 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் கெஸ்பேவ பகுதியில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வருகின்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் சில கடைகளில் தொடர்ச்சியாக பொருட்கள் காணாமல்போன நிலையில், இதனை கவனித்த கடைக்காரர்கள், தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா காட்சிகளை சரிபார்த்த போது இந்த மோசடி தெரியவந்துள்ளது.

சொகுசு காரில் வந்த பெண் ஒருவர் பொருட்களைத் திருடுவது தெளிவாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனத்தின் பதிவு எண்ணுடன் அங்குருவடோட்டா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொகுசு காரில் பயணித்த தம்பதியினர், இதே முறையில் மற்ற கடைகளிலும் திருட்டில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து வாகனத்தை பின்தெடர்ந்த பொலிஸார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், தம்பதியினர் இருவருக்கும் பல குற்றங்களுக்காக வழக்கு பதிவுகள் இருப்பதாகவும், தங்கம் மற்றும் டயர்கள் உட்பட பல மதிப்புமிக்க பொருட்களைத் திருடிய வரலாறு அவர்களுக்கு உண்டு என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!