சமூக வலைதள விளம்பரத்தை நம்பி அழகுசாதன கிரீம் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!

சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் எவ்வளவு பெரிய உயிராபத்தை விளைவிக்கும் என்பதற்கு கேரளாவில் நிகழ்ந்துள்ள சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

‘இன்ஸ்டாகிராம்’, ‘யூடியூப்’ போன்ற சமூக வலைதளங்களில் தனிநபர்கள் பல்வேறு பொருட்களை விளம்பரம் செய்கின்றனர். அதன் நம்பகத்தன்மை குறித்த எந்த உறுதியும் இல்லாத போதும் பலர் அவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவதற்காக சமூக வலைத்தள விளம்பரத்தைப் பார்த்து அழகு பூச்சு ( கிரீம்) வாங்கிப் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சிறுமி சுமார் ஒரு வருடமாக அந்தக் கிரீமைப் பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில், ஆய்வில், கிரீமில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக, ஒரு மில்லியனில் 12,500 பாகங்கள் பாதரசம் (Mercury) இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் சிறுமிக்கு சிறுநீரகத்தின் இரத்த வடிகட்டும் செயல்பாட்டைப் பாதிக்கும் Membranous Nephropathy என்ற நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் வீக்கம், தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளன.மருத்துவமனையில் சுமார் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ள போதிலும், அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைக்குழுவும் குறித்த கிரீம் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் மாநிலம் முழுவதும் போலி அழகுசாதன பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MahindaRajapaksa
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் 81ஆவது பிறந்தநாளில் நாமல் வெளியிட்ட விசேட கடிதம்!
LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!